லதா ராமகிருஷ்ணன்
லதா ராமகிருஷ்ணன் நவம்பர் 9,1957 அன்று பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவர். இப்பொழுது முழு நேர எழுத்தாளராகவும் ,மொழிபெயர்ப்பாளராகவும் இயங்கி வருகிறார்.
முதல் கவிதை 1983இல் கணையாழி இதழில் வெளியாகியது. தமிழின் சிறு பத்திரிக்கைகள் பெரும்பாலானவற்றில் இவருடைய கதைகள், கவிதைகள் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அனாமிகா என்ற பெயரில் சிறுகதைகள் எழுதுகிறார்.ரிஷி என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறார்.ல.ரா என்ற பெயரில் தினமணிக் கதிரில் 1990களிலும் அதற்கு முன்பும் நிறைய சமூகம் சார்ந்த, இலக்கியம் சார்ந்த இவரது கட்டுரைகள் வெளியாகி உள்ளன.
இதுவரை இரண்டு சிறுகதை தொகுப்புகள், எட்டு கவிதை தொகுப்புகள், மூன்று கட்டுரை தொகுப்புகள், முப்பதுக்கும் மேற்பட்ட மொழியாக்க நூல்கள் வெளியாகியுள்ளன. ஆங்கிலத்திலிருந்து தமிழிலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்திருக்கிறார்.
இலங்கைப்போர் குறித்த கவிதைகளைத் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் தீபச்செள்வனின் 50க்கும் மேற்பட்ட கவிதைகள் இவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.
கல்வெட்டு பேசுகிறது என்ற சிற்றிதழில் வெளியான கவிதைகளடங்கிய தொகுப்பு இவருடைய ஆங்கில மொழி பெயர்ப்பில் வெளிவந்துள்ளன.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் 'சீனியர் ஃபெலோஷிப்' பெற்று Introducing Neo-tamil poetry to the world outside and to the visually challenged என்ற கருப்பொருளில் இரண்டு வருடங்கள் ஆய்வுப் பணி மேற்கொண்டவர்.
-
சத்யஜித் ரே
₹225.00எடை: 365 கிராம் நீளம்: 220 மி.மீ. அகலம்: 150 மி.மீ. பக்கங்கள்:184 விலை:ரூ.225 SKU: அட்டை: கெட்டி அட்டை ஆசிரியர்:லதா ராமகிருஷ்ணன் Learn More