தென்கச்சி கோ.சுவாமிநாதன்
தென்கச்சி கோ. சுவாமிநாதன் (1946 - செப்டம்பர் 16, 2009) புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். பல சிறுகதைகளையும் எழுதியிருந்தார். அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப் பட்டதாரி ஆவார். நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் நிலையான இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர். இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977 முதல் 1984 வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் வேளாண்மை நிகழ்ச்சிப் பிரிவு இயக்குனராக இருந்தபோது "வீடும் வயலும்" என்ற சிறப்பான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். "அன்பின் வலிமை", "தீயோர்", மற்றும் "அறிவுச்செல்வம்" உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். "இலக்கணம்" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
-
சிறகை விரிப்போம்
₹188.00எடை: 245 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 208 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 180 SKU: 978-93-82577-31-7 ஆசிரியர்: தென்கச்சி கோ. சுவாமிநாதன் Learn More