Nirappirigai
- BrandsVanavil Puthakalayam
- Product Code: 978-93-93699-19-0(O472)
- Availability: In Stock
-
₹155.00
- Ex Tax: ₹155.00
வெண்ணிற ஒளியானது
முப்பட்டகத்தின் மீது விழும்போது வெவ்வேறு கோணங்களில் சிதறி, அந்த விலகலுக்கு ஏற்ப ஒளிக்கற்றை பல்வேறு
நிறங்களில் வெளிப்படுவதை 'நிறப்பிரிகை' என்று கட்டியம் கூறுகிறது அறிவியல்.
மனித மனமும் அப்படியென்றே
படுகிறது. ஒரு நிகழ்வானது பார்க்கிறவரின் மனதில்
- சூழலுக்கு ஏற்பவோ அல்லது ஏற்கனவே ஏற்பட்ட அனுபவத்தினாலோ அல்லது அப்போதைய மனநிலையினாலோ,
ஒரு குறிப்பிட்ட கோணத்தில் விரிய… சலனத்தினை விளைவிக்கிறது. வெவ்வேறு கோணங்களில் அணுகுகிற
மனங்களின் தன்மைக்கு ஏற்ப எதிர் விளைவுகளும் சாத்தியமாகின்றன. மனம் தன்னகத்தே கொண்டிருக்கும்
விசித்திரத்தன்மையானது, நிகழ்வின் யதார்த்தத்தை
ஒட்டியோ அல்லது விலகியோ பிரதிபளித்து, விலகலுக்கேற்ப மனிதர்களுக்கு நிறத்தினை
கூட்டிவிடுகிறது.
மனித மனதினுள் நிகழும் அப்பேற்பட்ட எண்ணச் சிதறல்களை
முடிந்த அளவிற்கு அதன் உண்மைக் கோணத்திலிருந்து
பிசகாமல் வார்த்தெடுக்க மேற்கொண்ட முயற்சிகளே இந்த கதைகள்.
மனம் என்கிறபோது
கூடவே சிக்கலும் ஒட்டிக்கொண்டு வந்துவிடுகிறது. "எல்லாமே கால மாற்றத்திற்கு உரியது"
என்கிற பொது விதியின் அடிப்படையில், கதைமாந்தர்களின் மன (கோண) விலகல்களும் மாற்றத்துக்கு
உட்பட்டது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. எனவே இந்த கதைகளின் அடிநாதம் வாசிப்பவர்களின்
மனவிலகல்களுக்கு ஏற்ப உணர்ந்துகொள்ளப்பட்டு அவற்றின் சாசுவதத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும்
அபாயம் இருக்கிறது. மோசமில்லை, அப்படியே இருக்கட்டும்.
இந்த கதைகள், படிக்கிற
ஒரு கணமேனும் மனதினில் ஏதேனும் ஒரு நிறத்தினை உணரச் செய்யும் பட்சத்தில், அவை படைக்கப்பட்டதிற்கான
நோக்கத்தினை எட்டி விட்டதாகக் கொள்ளலாம்.